1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டுபிடிப்பு : ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்
London
Egg
By Sumithiran
இங்கிலாந்தின் பெர்ரிஃபீல்ட்ஸ் பகுதியில் 1,700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முட்டையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, சேதமடையாத முட்டையின் மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் இன்னும் இயற்கையாக முட்டையில் பாதுகாக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
உலகின் ஒரே முட்டை
ஒக்ஸ்போர்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எட்வேர்ட் பிடுல்ஃப், 1700 ஆண்டுகளுக்குப் பிறகும் மனித தலையீடு இல்லாமல் இயற்கையாகவே மஞ்சள் கருவும் வெள்ளைகருவும் பாதுகாக்கப்பட்ட உலகின் ஒரே முட்டை இது என்று தான் நம்புவதாகக் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்