இந்திய எல்லை அத்துமீறல்கள்! கடலில் போராட்டத்தில் குதித்த யாழ் மக்கள்
இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்தக் கோரி வடக்கு கடற்றொழிலாளர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று(3) காலை 9:30 மணிமுதல் ஆரம்பமாகியுள்ளது.
வடமராட்சியிலிருந்து சுமார் 200 க்கு மேற்பட்ட படகுகளில் கறுப்பு கோடுகளுடன் கடலில் இறங்கி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
கறுப்புக் கொடி போராட்டம்
குறிப்பாக பருத்தித்துறை, முனை, கற்கோவளம், போன்ற பகுதிகளிலிருந்தே அதிகளவான படகுகள் கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைக் கடல் எல்லையில் இன்றையதினம் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்கள் கடந்த மாதம் 26ஆம் திகதி அறிவித்திருந்தன.
அதனடிப்படையில் தீர்வை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையே முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழிலாளர்களின் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |