750 அகதிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து கோர விபத்து
ஆபிரிக்க, அரபு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கு குடியேறும் நிலை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், அகதிகளின் வெளியேற்றம் தொடர்பில் கண்காணிப்பு தீவிரமாக உள்ளதால் அதில் இருந்து தப்பிக்க ஆபத்தான சூழல்களில் கூட மக்கள் சட்டவிரோதமாக நுழையும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
அகதிகள்
அப்படி, கடல்வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைய முயன்ற சுமார் 750 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
கீரிஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இந்த படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
எகிப்தில் இருந்து புறப்பட்ட இந்த படகு லிபியாவில் உள்ள கடற்கரையில் இருந்து அகதிகளை ஏற்றி வந்துள்ளது.
இந்த படகில் சுமார் 100 க்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்த நிலையில், கடலில் விழுந்த பெரும்பாலானோர் உயிர்பிழைக்க மாட்டார்கள் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படகு இத்தாலியை நோக்கி சென்றதாகவும், அதில் பயணித்தவர்கள் சிரியா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
