சிறிலங்கா இராணுவ அதிகாரி நடத்திய விபசார விடுதி -தாய்லாந்து அழகிகள் உட்பட பலர் கைது
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பெரும் பணக்காரர்கள் வந்து செல்லும் கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து இரண்டு அழகான தாய்லாந்து பெண்கள் உட்பட ஐவரை கைது செய்ததாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.
ஏனைய சந்தேக நபர்களில் இலங்கையைச் சேர்ந்த அழகிய யுவதியும் முகாமையாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியும் இந்த விபசார விடுதியை நடத்துவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நாட்டின் அழகிய பெண் தனது ஏழு வயது மகளை குறித்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சுற்றிவளைப்பு
கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் விபசார நிலையம் நடத்தப்படுவதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையின் பணிப்பாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் உதய குமாரவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை சார்ஜன்ட் ஜெயலால் கண்டுபிடித்த தகவலின் அடிப்படையில் கோட்டை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் அனுமதியுடன் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
காவல்துறை சார்ஜன்ட் முகவராகவும், காவல்துறை கான்ஸ்டபிள் உதயகுமார சிக்னல்காரனாகவும் பெண் ஒருவரை 10,000 ரூபாவுக்கு வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்த நேரத்திலேயே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு கூட இல்லாமல் தாய்லாந்து பெண்கள்
குறித்த இடத்தில் தங்கியிருந்து விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தாய்லாந்து இளம் பெண்கள் இருவரிடமும் கடவுச்சீட்டு கூட இல்லை என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இலங்கைப் பெண் சுமார் பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்பவர் எனவும், அவருக்கு சொந்தமான மூன்று சொகுசு கார்கள் மற்றும் பிலியந்தலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடி வீடு உள்ளது எனவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவர் இந்த தொழிலில் இருந்து இந்த சொத்துக்களை சம்பாதித்ததாக வெளிப்படுத்தியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதான இராணுவ அதிகாரி சுகயீனத்தினால் பாதிப்பு
இதேவேளை சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட மோசடியின் பிரதான சந்தேக நபரான இராணுவ அதிகாரி சுகயீனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அழகிய தாய்லாந்து பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு தாய்லாந்து தூதரகத்தின் ஊடாக மொழிபெயர்ப்பாளரின் உதவியைப் பெறவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.
