ஜெனிவா முருகதாசன் திடலில் ஒன்று கூடுமாறு புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு (படங்கள்)
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர்
ஐ.நா சபையின் 52வது மனித உரிமை கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இதே நேரம் இன்று தாயகத்திலிருந்து அனந்தி சசிதரன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் இருந்து மட்டு மாநகர நகரபிதா சரவணபவான்,அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் கணேஷ் ஆகியோர் மதியம் 2:30 மணியளவில் ஜெனிவா விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
தமிழ் இனத்துக்கு நடந்த அநீதி
இவர்கள் தமிழ் இனத்துக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கேட்டு வரும் திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ. நா சபைக்கு முன்னால் உள்ள முருகதாசன் திடலிலே நடைபெறவுள்ள ஒன்றுகூடலிலும் மற்றும் ஐ. நா வின் 52வது கூட்டத்தொடரிலும் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழ் மக்களுக்கு அழைப்பு
எனவே ஜெனிவா முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் மக்களையும் நிகழ்வின் ஏற்பாட்டளர்கள் அழைத்துள்ளனர்.

