நாய்கள் உண்ட நிலையில் பச்சிளம் குழந்தையொன்றின் சடலம் - யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka Police Investigation
Child Abuse
By pavan
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தையொன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (02) மாலை மருதங்கேணி காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் 34 வயதான பெண்ணொருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,பிறந்த நான்கு நாட்களான பெண் குழந்தை ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்டபோது கண்ட ஊரவர்கள் காவல்துறையினருக்கு தெரிவித்தனர்.
பெண் கைது
இது தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்ட காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்