மிஹிந்தல விஹாராதிபதியை கொல்ல சதி
Sri Lanka
Sri Lanka Social Media
By Sumithiran
கொல்வதற்கான சதித்திட்டம்
தம்மை கொல்வதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மிஹிந்தல ரஜமஹா விகாரையின் பீடாதிபதி பூஜ்ய வலஹங்குனவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஊழல் அரசியல்வாதிகளை புகழ்ந்து பேசாமல் மக்கள் படும் கஷ்டங்களை தான் எப்பொழுதும் எடுத்துரைப்பதாக கூறிய அவர், தான் மரணத்திற்கு அஞ்சவில்லை என்றும் கூறினார்.
திட்டங்கள் முறியடிப்பு
'மிஹிந்தலையில் மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களைத் திறக்க பிரதேசத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் முயற்சித்தபோதும், அவர்களின் திட்டங்களை நான் முறியடித்தேன்.
சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு எதிராக அரசியல் பிரமுகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த தலைவனை அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்,' என்றார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்