கடலில் விழுந்த 17 கொள்கலன்களில் ஒன்று கரையொதுங்கியது : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Port of Colombo Sri Lankan Peoples Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Sathangani Aug 02, 2026 11:29 AM GMT
Report

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே உள்ள கடல் பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றிலிருந்து கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்களில் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெந்தோட்டை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இந்துருவை - அதுருவெல்ல கடற்கரையில் இன்று (2) காலை குறித்த கொள்கலன் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள கொள்கலன் அருகே பொதுமக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: கடற்தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்: கடற்தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கடற்படையினர் வேண்டுகோள் 

கொழும்பு துறைமுகத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 17 கடல் மைல் தொலைவில் விழுந்த இந்தக் கொள்கலன்கள், வீசும் காற்று மற்றும் கடல் நீரோட்டத்தின் திசைக்கு ஏற்ப சிலாபம், நீர்கொழும்பு மற்றும் பேருவளை வழியாகக் காலிக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளை நோக்கித் தெற்கு திசையில் மிதந்து செல்ல அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடலில் விழுந்த 17 கொள்கலன்களில் ஒன்று கரையொதுங்கியது : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | A Container That Fell Into The Sea Washed Ashore

இதன் காரணமாக, கொழும்பிலிருந்து காலி வரையிலான தெற்கு கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் படகுகளும் தீவிர அவதானத்துடன் இருக்குமாறு கடற்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மிதந்து கொண்டிருக்கும் இந்தக் கொள்கலன்கள் படகுகளுடன் மோதினால் பாரிய விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால், படகுகளை இயக்கும் போது மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கடலில் மிதக்கும் கொள்கலன்கள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக அது குறித்துக் கடற்றொழில் திணைக்களத்தின் வானொலித் தொடர்பாடல் மையங்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தவறான முடிவெடுத்து இரட்டைச் சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

யாழில் தவறான முடிவெடுத்து இரட்டைச் சகோதரிகள் உயிர்மாய்ப்பு!

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு தீவிர அதிகரிப்பு!

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு தீவிர அதிகரிப்பு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026