கனடாவில் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம் : நொடிப்பொழுதில் பறிபோன பெருந்தொகை பணம்
வங்கியிலிருந்து பேசுவது போல் தொலைபேசி ஊடாக பேசி கனடாவில்(canada) தம்பதியினரிடம் 33000 டொலர்களை ஏமாற்றி பறித்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோவின் ஹோரோன் பகுதியில் கோட்ரேஜ் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொலைபேசி ஊடாக இடம்பெற்ற மோசடி
தொலைபேசி ஊடாக இந்த மோசடி இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கியில் இருந்து பேசுவது போல் பேசி இந்த தம்பதியினரை நபர் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.
கடன் அட்டை தகவல்களைப் பெற்றுக் கொண்டு மோசடி இடம் பெற்றுள்ளது. வங்கி தகவல்களை வழங்கி சில மணித்தியாலங்கள் இவ்வாறு பணம் களவாடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் அறிவுறுத்தல்
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு மோசடி இடம்பெறும் நிலையில் வங்கி தகவல்கள், கடனட்டை, வங்கி அட்டைகள் குறித்த தகவல்களை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |