மட்டக்களப்பு கடற்கரையிலும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை
மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இன்று (20) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது.
இறந்த நிலையில் கடலாமையொன்று கரையொதுங்கி உள்ளதாக அப்பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்கள் வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
தனைத் தொடர்ந்து கல்லடி வனஜீவராசிகள் அலுவலகத்தின் அதிகாரி குறித்த இடத்திற்கு விரைந்து உயிரிழந்த கடலாமையை மீட்டு, அம்பாறை வனஜீவராசிகள் மிருக வைத்திய பிரிவிற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், உடற்கூற்று பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டதன் பின்னர் குறித்த உடற்கூற்று அறிக்கை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே தீப்பற்றி கடலில் எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் 20 இற்கும் மேற்பட்ட கடலாமைகளும் டொல்பின்களும் நாட்டின் பல்வேறு கடற்கரைப்பகுதிகளிலும் கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.