கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
🛑 புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியல் காலம்
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30-07-2026) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30-07-2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |