முன்னாள் புலி முரளியின் பிரகீத் பரபரப்பும்... யூலை 30 ராஜீவ் அடியும்!
ரோஹன விஜயவீரா கொல்லப்பட்ட பின்னர் ஜேவிபியின் மறுபிறப்புக்கு உதவியதாகக் கிசுகிசுக்கப்படும் இந்தியாவின் றோ அமைப்பு, இலங்கை தொடர்பான சில விடயங்களை மறக்க விரும்புவதான உபரிகிசுகிசுக்களும் உண்டு.
அந்தப் பட்டியல்களில் ஒன்றாக, 1987 யூலை 30ஆம் திகதியான இன்றைய நாளில் அன்று கொழும்பில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளது.
எனினும், இன்றுவரை இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான உலகின் இராஜதந்திர வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு தாக்குதலாகவே இது உள்ளது.
ஏனெனில், அது ஒரு வெளிப்புறத் தாக்குதலாக இல்லாமல், விருந்தினராக அழைத்த நாடு ஒன்றின் இராணுவ அணிவகுப்பில் நடந்த தாக்குதல் இது.
அன்று ஒருவேளை சிறிலங்கா கடற்படை விஜிதரோஹனவின் துப்பாக்கிப்பிடி ராஜீவ் தலையைப் பிளந்திருந்தால், அது இந்தோ - சிறிலங்காவின் வரலாற்றை வேறு திசைக்கு இழுத்த ஒரு நாளாக இந்த யூலை 30 ஐ மாற்றியிருக்கும்.
இவ்வாறான பழைய பரபரப்புக்களின் பின்னணியில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மையப்படுத்திய ஆட்டங்கள் மற்றும் பிரகீத் எக்னலிகொட என்ற ஊடகர் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் ஒரு சாட்சியான முரளி என அறியப்படும் சுரேஷ்குமார் தவேந்திரன் வழங்கும் புதிய புதிய பரபரப்புகளும் வந்துள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது செய்தி வீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |