உக்ரைனுக்கு நிதி உதவி செய்ததால் ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த கதி!
உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மொஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் அறிவியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த செய்தியாளரான தர்யா ஷிபச்சேவா என்பவராவார்.
இவர் ரஷ்யாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசத்துரோக வழக்கு
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடத்தப்பட்டது.

உக்ரைன் நாட்டுக்குப் பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2025இல் கைது செய்யப்படுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது குறித்த பெண் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.
ரஷ்யாவில் தொடரும் ஊடகக் கட்டுப்பாடு உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியது முதல், ரஷ்யா தனது நாட்டில் ஊடகத் தணிக்கைச் சட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு' (CPJ) வெளியிட்ட தகவல்களின்படி, ரஷ்யாவில் இதுவரை 29-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்களின் பணி மற்றும் செய்தியளித்தல் தொடர்பான காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |