உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு துணைபுரிந்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நால்வரும் இன்று (30.07.2026) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர, அவரது மனைவியான 35 வயதுடைய ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க, கொலைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் 49 வயதுடைய சாரதி ஜயசிங்க ஆராச்சிகே ரஜித சாலிய சமரசிங்க மற்றும் குண்டசாலை கபவல்துறை பயிற்சி கல்லூரியின் காவல்துறை பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோராவர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |