கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி படுகொலை: உயிரை மாய்த்த கணவன்
இரத்தினபுரியில் (Ratnapura ) மனைவியும் மகனையும் கொடூரமாக தாக்கிய கணவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொடூர சம்பவம் நேற்று (23) இரத்தினபுரி - நிவிதிகல தெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலில் மனைவி உயிரிழந்ததுடன், மகன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் , நிவிதிகல தெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனைவியையும் மகனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு, அந்த நபர் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

48 வயதுடைய ஆண் ஒருவரும் அவரது மனைவியான 39 வயதுடைய பெண்ணுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலின் போது 18 வயதுடைய மகனும் படுகாயமடைந்துள்ள நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இவர்களுக்கு மேலும் மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் தற்போது உறவினர்களின் பராமரிப்பில் உள்ளனர்.

சம்பம் தொர்பில் நிவித்திகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |