முல்லைத்தீவு வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்: பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் அழிந்து நாசம்
Sri Lanka Police
Mullaitivu
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Fire
By Shadhu Shanker
முல்லைத்தீவு முள்ளியவளை காவல்பிரிவுக்குற்பட்ட தண்ணீரூற்று பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(10) அதிகாலை ஏற்பட்டுள்ளது.
திடீரென தீ ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி குறித்த வர்த்தகநிலையத்தில் பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இருப்பினும் குறித்த தீப்பரவல் காரணமாக வர்த்தகநிலையத்தில் இருந்த பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் முற்று முழுதாக எரிந்து அழிவடைந்துள்ளது.
தீ பரவல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி