முகநூல் மூலம் ஆண்களை காதல் வலையில் வீழ்த்தும் கொள்ளையர் கூட்டம் சிக்கியது
முகநூல் மூலம் ஆண்களை அடையாளம் கண்டு, 'வாட்ஸ்அப்' மற்றும் 'மெசஞ்சர்' மூலம் அரட்டை அடித்து போலி காதல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் அந்த ஆண்களை மிஹிந்தலை காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, மரங்களில் கட்டி வைத்து, அடித்து, அவர்களின் மோட்டார் சைக்கிள்கள், பணம் மற்றும் பிற சொத்துக்களைக் கொள்ளையடித்தனர்.
பெண் உட்பட நால்வர் கைது
கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் உட்பட அனுராதபுரம், அசோகபுர, விஜயபுர மற்றும் கெக்கிராவ பகுதிகளைச் சேர்ந்த 21, 27 மற்றும் 32 வயதுடைய மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை மற்றும் அவுகானை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் அளித்த புகாரின் பேரில், அவரது காதலி அவரை அழைத்து மிஹிந்தலை நகரத்திற்கு வரச் சொன்னதை அடுத்து, குறித்த பெண்ணும் ஒரு குழுவினரும் அவரைத் தாக்கி, மரத்தில் கட்டி வைத்து, அவரது மோட்டார் சைக்கிள், பணம், கைபேசிகள் மற்றும் வங்கி அட்டைகளைத் திருடிச் சென்றதாகக் கூறி, விசாரணை நடத்தி சந்தேக நபர்களைக் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவங்களில் உயர்மட்ட வேலைகளில் பணிபுரியும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒரு மில்லியன் மதிப்புள்ள சொத்து மீட்பு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நான்கு கைபேசிகள், வங்கி அட்டைகள், கைபேசி சாஜர்கள் மற்றும் பற்றறிகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், மூன்று சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர், தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோருவோம் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
