மன்னாரில் இடம்பெற்ற மாபெரும் குருதிக்கொடை முகாம்
மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கத்தோடு மன்னார் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மன்னார் பொது வைத்தியசாலையில் குருதிக் கொடை முகாமொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த இன்று (09) காலை 8 மணி தொடக்கம் 1 மணி வரை நடைபெற்றது.
குருதிக் கொடை
மன்னார் ரோட்டரி கழகத்தில் தலைவர் திருமலைராசா தனேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் தொடர்ச்சியாக குருதி வழங்கும்
கொடையாளர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் குருதியினை வழங்கியிருந்தனர்.

இதன்போது குருதிக் கொடையாளர்களுக்கு குருதிக் கொடை கான பதிவுப் புத்தகம் , அத்தாட்சிப் பத்திரம் மற்றும் நினைவுச் சின்னம் போன்றவை வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்விற்கு மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் ,தாதியர்கள் ,மன்னார் அஞ்சல் அலுவலகம் , இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையினர் முதியோர் நலன் சார்ந்து செயல்படும் டெவ்லிங் நிறுவனத்தினர் ,மன்னார் ரோட்டரி கழகத்தின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 6 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்