சரத் பொன்சேகா பதவி விலகல்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் (Samagi Jana Balawegaya) தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சரத் பொன்சேகா (sarath fonseka) பதவி விலகல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அவர் கடந்த 5ஆம் திகதி செலுத்தியிருந்தார்.
உயர் நீதிமன்றம்
இதேவேளை, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) மற்றும் மனுஷ நாணயக்கார (Manush Nanayakkara) ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (09) காலை இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
இந்த தீர்ப்பின் விளைவாக, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் வெளியேற்றம் அவர்களின் நாடாளுமன்ற ஆசனங்களையும் அமைச்சுப் பதவிகளையும் இழக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |