தமிழ் பொதுவேட்பாளரை மக்களை கூட்டியல்லவா அறிவித்திருக்கவேண்டும்!
சிறிலங்காவின் அரசதலைவருக்கான தேர்தல் களத்தில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுவது என்பது ஒரு வரலாற்றுச் சம்பவம்.
தாம் யார் என்பதையும், தமது அபிலாசைகள் என்ன என்பதையும் தமிழ் இனம் உலகத்திற்கு எடுத்துச் செல்லுகின்ற ஓர்மம் மிக்க ஒரு தருணம்.
தமிழ் மக்களின் கொள்கைகளை முன்னெடுத்துச்செல்ல இருக்கின்ற அந்த வேட்பாளரை தமிழ் மக்களைத் திரட்டி, மக்களைக்கொண்டு பெருமையுடன் அறிவிக்கவேண்டிய நிலையில், அப்படிச் செய்யாமல், வெறுமனே ஒரு ஊடக சந்திப்பில் வேட்பாளர் அறிமுகத்தை மட்டுப்படுத்திக்கொண்டதையிட்டு விமர்சனங்கள் - தமிழ் மக்கள் மத்தியில் இருந்து எழுப்பப்படுகின்றது.
சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் 60இற்கும் மேற்பட்ட தமிழ் பொது அமைப்புக்கள் இணைந்து ஒரு வேட்பாளரை முன்நிறுத்துவது என்கின்ற பெருமையை தமிழ் இனம் தமது இதயங்களில் சுமக்கவேண்டும் என்பதற்காகவும், இந்த விடயம் பெருமைக்குரிய தமிழ் மக்கள் திரள்நிலை பயணமாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசுகின்றது IBC-தமிழின் இன்றைய ‘பார்வைகள்’ நிகழ்ச்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |