மன்னாரில் உயிரிழந்த இளம் தாயின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுகின்றது! எழுந்துள்ள குற்றச்சாட்டு

Mannar Sri Lanka Doctors
By Shadhu Shanker Aug 09, 2024 03:04 PM GMT
Report

மன்னார்(Mannar) பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகஸ்தர்களின் கவனயீனத்தினால் மரணம் அடைந்த இளம் தாயின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் திசை திருப்பப்படுவதாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் V.S. சிவகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றமிழைத்தவர்களை காப்பாற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் அலுவலகத்தில் இன்றைய தினம்(9) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மன்னார் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மன்னார் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சிந்துஜாவின் மரணம்

அவர் மேலும் தெரிவிக்கையில், “சிந்துஜாவின் மரணம் நிகழ்ந்து ஏறக்குறைய 11 நாட்கள் நிறைவுற்றுள்ளது. இன்னும் பூர்வாங்கமான அறிக்கை வெளிவரவில்லை. ஆனாலும் இவர்கள் விசாரணைகளை வேறு கோணத்தில் திசைதிருப்புவதாக நம்பதகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

மன்னாரில் உயிரிழந்த இளம் தாயின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுகின்றது! எழுந்துள்ள குற்றச்சாட்டு | Mannar Young Mother Death Investigation Issues

மன்னார் வைத்தியசாலையின் விசாரணை அறிக்கையும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அறிக்கையும், கள அறிக்கையும் ஒரு விடயத்தை சொல்ல மாகாண சுகாதார அமைச்சின் விசாரணை இன்னொரு விதமாக காணப்படுகின்றது.

குறிப்பாக மாகாண சுகாதார அமைச்சின் அறிக்கையில் இந்த கொலையில் சம்மந்தப்பட்டவர்களை அல்லது சம்மந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்க கூடியவர்களை அதிகாரமிக்கவர்களை காப்பாற்றுவதாகவே அமைந்துள்ளதாக நம்பதகுந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கிய உறுதிமொழி

மன்னாரில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கிய உறுதிமொழி

நீதியான விசாரணை

இரண்டு குடும்பநல உத்தியோகஸ்தர்கள் இரண்டு தாதிய உத்தியோகஸ்தர்கள் உட்பட ஒரு வைத்தியரையும் தண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே விசாரணைகள் ஒரு குறுகிய அளவிலே முன்னெடுக்கப்படுகின்றது.

மன்னாரில் உயிரிழந்த இளம் தாயின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுகின்றது! எழுந்துள்ள குற்றச்சாட்டு | Mannar Young Mother Death Investigation Issues

தற்போது சம்மந்தப்பட்டவர்களை இடை நீக்கம் செய்யாது வெறுமனே இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளே வைத்தியசாலை தரப்பாலும் மாகாண சுகாதார அமைச்சாலும் இடம் பெறுவதாவும் சம்மந்தப்பட்ட 5 நபர்களுக்கும் இன்றைய தினம் இடம் மாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிய கூடியதாக உள்ளது.

நீதியான விசாரணை செய்வதாக மக்களுக்கு கூறிவிட்டு சாதாரண இடமாற்றத்தையே செய்வதாகவும் நீதியான விசாரணை இடம் பெறவில்லை எனவும் எனவே நீதியான விசாரணை இடம் பெறவேண்டும் என்பதுடன் குற்றம் இழைய்தவர்கள் வைத்திய துறையில் இருந்தே நீக்கப்படவேண்டும் என பொது அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

மன்னார் இளம் தாயின் மரணம்..! ஊழியர்களின் அசமந்த போக்கே காரணம் - விசாரணையில் உறுதி

மன்னார் இளம் தாயின் மரணம்..! ஊழியர்களின் அசமந்த போக்கே காரணம் - விசாரணையில் உறுதி

எதிரான செயற்பாடுகள்

அதை விடுத்து சாதாரண இடமாற்றம் என்பதை பொது அமைப்புக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளபோவதில்லை என்பதுடன் இவ்வாறு செய்வதனால் இவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவிலே போராட்டம் ஒன்றை மேற்கொள்ள எங்களை வைத்திய தரப்பினர் நிர்பந்திக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துகொள்கின்றேன்.

மன்னாரில் உயிரிழந்த இளம் தாயின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுகின்றது! எழுந்துள்ள குற்றச்சாட்டு | Mannar Young Mother Death Investigation Issues

தொடர்சியாக நாங்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதார துறையினரிடம் பேசி வருகின்றோம் இந்த மரணம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பிலும் பேசியிருக்கின்றோம்.

நீதியை வழங்குவதில் இருந்து நீங்கள் பின்வாங்கினால் வைத்தியசாலைக்கும் மாகாண சுகாதார அமைச்சுக்கும் எதிராக எங்கள் செயற்பாடுகள் இருக்கும் என்பதை தெளிவாக உரியவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

எனவே இந்த விடயத்தில் நாங்கள் தொடர்ந்து விழிப்போடும் நீதிக்காகவும் காத்திருக்கின்றோம்” என சுட்டிகாட்டியுள்ளார்.

[

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்