பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
sri lanka
students
a/l exam
By Vanan
2021 ஆம் ஆண்டுக்கான, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
நாளையதினம் (07) முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி வரை திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்த அவர், இம்முறை பரீட்சை நடைபெறும் பரீட்சை மத்திய நிலையங்களில் இலத்திரனியல் சுவர் கடிகாரத்தை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்காக வைத்தியசாலைகளுக்கு அருகாமையிலேயே 29 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2,437 மத்திய நிலையங்களில் 279,141 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
