மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்
Mannar
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sumithiran
மன்னார் மாவட்டத்தில் 2022 ஆண்டு இடம் பெற்ற கபொத உயர்தர பரீட்சையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் அன்ரனி சரோன் டயஸ் உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அத்துடன் அகில இலங்கை ரீதியாக 801 ஆம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்
விஞ்ஞான பிரிவில் முதலிடம்
மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த அன்ரனி சரோன் டயஸ் உயிரியல்,பெளதீகவியல்,இரசாயன வியல் ஆகிய மூன்று பாடங்களிலும் A தர சித்திகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளார்
மடு கல்வி வலயத்தில் முதலிடம்
இதேவேளை கணிதப் பிரிவில் மடு கல்வி வலயத்தில் உள்ள அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தியாகன் தேவகரன் 3A சித்தி பெற்று முதல் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடி கொடுத்துள்ளார்.
முதலிடம் பெற்ற மாணவன் தேவகரன் அடம்பனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி