உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சாதிக்கத் தவறிய தமிழ் பேசும் மாணவ, மாணவிகள்

Sri Lanka Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Sri Lankan Schools
By Shadhu Shanker Sep 06, 2023 06:28 AM GMT
Report

இலங்கையில் கடந்த(2022) ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் பேசும் மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலிடங்களை பெறுவதற்கு தவறியுள்ளமை, கல்வியில் அவர்களுக்குள்ள ஆர்வம் தொடர்பான கேள்விகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கும் நிலையில், உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தமிழ் பேசும் மாணவ, மாணவிகள் சாதிக்க தவறியுள்ளனர்.

உயர்தர பரீட்சை :பார்வையற்ற மாணவன் படைத்த சாதனை

உயர்தர பரீட்சை :பார்வையற்ற மாணவன் படைத்த சாதனை

பெரும்பான்மை மாணவர்கள்

மேலும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் பெரும்பான்மை மாணவர்கள் முதலிடத்தைப் பெற்று சாதித்துள்ளனர்.

அந்த வகையில் உயிரியல் பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவியான பிரமோதி பஷானி முனசிங்க முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

al results 1st rank

பௌதீக விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு ரோயல் கல்லூரியை சேர்ந்த கோனதுவகே மனெத் பானுல பெரேராவும் பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் காலி ரிச்மண்ட் கல்லூரி மாணவனான சமுதித்த நயனப்ரியவும் முதல் இடங்களைப் பிடித்துள்ளனர்.

கொழும்பு சிறிமாவோ மகளிர் கல்லூரி மாணவியான காவிந்தினி தில்சராணி தருஷிகா வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். மாணவியான கலைப் பிரிவில், டபிள்யூ.ஏ.எம்.சஞ்சினி சத்சரணி முதலிடத்தைப் பெற்று கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் கல்வி நிலை 

இதேவேளை பொதுவாக அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழர் தாயகப் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்த போதிலும் துரதிஷ்டவசமாக இம்முறை அந்த வாய்ப்பு இல்லாது போயுள்ளமை தமிழர்களின் கல்வி நிலை குறித்த கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழர் தாயகப் பகுதிகளில் மாவட்ட ரீதியாக முதலிடத்தைப் பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் விபரங்கள் வெளியாகிவருகின்றன.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சாதிக்கத் தவறிய தமிழ் பேசும் மாணவ, மாணவிகள் | A L Exam Results

அந்த வகையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி உயிரியல் பிரிவில் மாவட்டத்தின் முதல் ஐந்து இடங்களையும், கணித பிரிவில் முதல் ஆறு இடங்களையும் பெற்றுள்ளது.

உயிரியல் பிரிவில் ஆனந்த ஜோதி வித்யாசாகர், கண்ணன் பவித்ரன், நாகசேனன் சாரங்கன், தர்மலிங்கம் அமலன், ரகு காந்தன் தனுசன் ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளனர்.

கணித பிரிவில்

கணித பிரிவில் ஸ்ரீ பந்தாகரன் சினேகன், லெஸ்லி பாஸ்கரதேவன் அபிசேக், சந்திரசேகரம் அபிசேகன், பகீரதன் தீபக், மொஹமட் நிஸ்வர் மொஹமட் இசாத், விமலசேகரன் கிசாலன் ஆகியோர் முதல் 6 இடங்களை பெற்றுள்ளனர்.

பொறியியல் பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலிடத்தை பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவன் அன்பழகன் திவன்பிரபாகர் பெற்றுள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறு: நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்

உயர்தர பரீட்சை பெறுபேறு: நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்

அத்துடன் உயிரியல் தொழில்நுட்பத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி சசிகா பாஸ்கரன் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி