உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை இன்று (20) வெளியிட்டுள்ளது.
இதற்கமைய உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பின்லாந்து கடந்த 7 ஆண்டுகளாக முதலிடத்திலேயே உள்ளது.
இந்தப் பட்டியலில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் அஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஆப்கானிஸ்தான் இறுதி இடத்தில்
இதேவேளை கணக்கெடுக்கப்பட்ட 143 நாடுகளில், 2020 இல் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து தொடர்ந்து மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.
அமெரிக்காவும் ஜேர்மனியும், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, முதல் 20 மகிழ்ச்சியான நாடுகளுக்கு கீழே விழுந்து, முறையே 23 மற்றும் 24வது இடங்களைப் பெற்றுள்ளன.
இதற்கு மாறாக, கோஸ்டாரிகா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் 12வது மற்றும் 13வது இடங்களைப் பெற்று முதல் 20 இடங்களுக்குள் நுழைந்துள்ளன.
மகிழ்ச்சியின் தரவரிசை
2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் வரையான காலப்பகுதியில் முதல் மகிழ்ச்சி நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படுகின்றன.
ஆப்கானிஸ்தான், லெபனான் மற்றும் ஜோர்தான் ஆகியவை குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ள அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான சேர்பியா, பல்கேரியா மற்றும் லாட்வியா ஆகியவை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளன.
தனிநபர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் போன்ற காரணிகளுடன், தனிநபர்களின் வாழ்க்கை திருப்தியின் சுயமதிப்பீட்டு மதிப்பீடுகளால் மகிழ்ச்சியின் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.
இந்தியா 126வது இடத்தில்
மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் எதையும் சேர்க்காத மாற்றத்தை அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா மட்டுமே முதல் 10 இடங்களில் உள்ளன, அதே நேரத்தில் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கனடா மற்றும் இங்கிலாந்து முதல் 20 இடங்களில் உள்ளன.
மகிழ்ச்சி குறியீட்டில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு இந்தியா 126வது இடத்தில் உள்ளதுடன் இலங்கை 128 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |