தங்கத்தாலானதென சந்தேகிக்கப்படும் பழங்காலப்பொருட்கள் கடற்படையினரால் மீட்பு...!
சட்டவிரோதமான முறையில் பழங்காலப் பொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் (Sri Lanka Navy) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம் (11) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே கல்பிட்டி (Kalpitiya) ஆலங்குடா பகுதியில் வைத்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் கரையோரப்பகுதிகளில் நிகழும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படையினர் அடிக்கடி ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கம்.
பழங்கால பொருட்கள்
அந்தவகையில் நேற்றைய தினம் (11) வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி விஜயா தலைமையிலான குழு மற்றும் புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் ஆலங்குடா பகுதியில் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அந்தப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த வீடொன்றில் சோதனையிட்டபோது தங்கம் என்று சந்தேகிக்கப்படும் பழங்கால பொருட்களை மீட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
இந்தப் பழங்காலப் பொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் வீட்டிலிருந்த உரிமையாளரும் கடற்படையினரால் கைது செய்யபட்ட நிலையில் இவர் கல்பிட்டி எத்தலை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பழங்காலப் பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |