சட்டவிரோத சிகரெட் கடத்தல்...சந்தேகநபர் அதிரடியாக கைது!
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை (Foreign cigarettes)கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த கைதானது இன்று (04) புத்தளம் (Puttalam) நாகவில்லு (Nagavillu) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது, இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
வெளிநாட்டு சிகரெட்டுக்களை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக புத்தளம் பிராந்திய போக்குவரத்து காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கெப்பெற்றது அதற்கமைய காவல்துறையினரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
வெளிநாட்டு சிகரெட்டுகள்
இதன்போது புத்தளம் பாலாவி (Palavi) பகுதியினூடாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்றினை நிறுத்தி சோதனைக்குட்படுத்தியபோது அதில் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மோட்டார் சைக்கிளில் இருந்து 4 பொட்டலங்கள் அடங்கிய 40 பெட்டிகளில் 800 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்தவரென பிராந்திய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட சிகரட் பெட்டிகளையும், அவற்றைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் புத்தளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |