மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் சடலமாக மீட்கப்பட்ட ஆண்!
மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கல்லடி புதிய டச்பார் வீதியை சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணை
குறித்த வாவியில் சம்பவ தினமான இன்று காலை 6.30 மணியளவில் வழமைபோல மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கியதையடுத்து அதனை மீனவர் கரைக்கு இழுத்து வந்து காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மது போதையில் வாவியில் நீராடிய நிலையில் நீரிழ் மூழ்கியுள்ளார் என காவல்துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |