மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய பிரஜை!
தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் 52 வயதுடைய கர்தெரா ஒய்தப் எனப்படும் பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலைக்கவசம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விகாரைக்கு வழிபாட்டுக்காக சென்ற இரண்டு பெண்கள், நபர் ஒருவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக விகாராதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் காலணிகள், தலைக்கவசம் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவை காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
குறித்த வெளிநாட்டவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து உயிரை மாய்த்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவர் வருகை தந்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் வெலிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.

வாடகை அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு அவர் விகாரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெளிநாட்டவரின் விசா காலம் முடிவடைந்துள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |