சிறிலங்கா அரசியலில் திரைமறைவில் இடம்பெறும் காய் நகர்த்தல்கள்-ஆளும் தரப்பில் ஏற்படுமா பிளவு?
alliance
political
sri Lanka
karu jayasuruiya
By Kalaimathy
சிறிலங்கா அரசியல் பரப்பில் மற்றுமொரு புதிய கூட்டணி உருவாகும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் திரைமறைவில் புதியதொரு அரசியல் கூட்டணியொன்று உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய அரசியல் புள்ளிகளுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை இரகசியமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் ஆளுங்கட்சியின் அரசியல் வட்டாரத்தில் சில திடீர் மாற்றங்கள் ஏற்படுமெனவும், கட்சியிலிருந்து முக்கிய புள்ளிகள் சிலர் வெளியேறக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.