பச்சை குத்தியவர்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்
World Aids Day
Sri Lankan Peoples
Tattoo
By Sumithiran
உடம்பில் பச்சை குத்தியவர்களுக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.
அதாவது பச்சைகுத்தியவர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எயிட்ஸ் உள்ளிட்ட 5 நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம்
பச்சை குத்துதல் மற்றும், ஊசி ஏற்றல் முதலான செயற்பாடுகள் மூலம், எயிட்ஸ் உள்ளிட்ட 5 நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக அந்த மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
குருதி பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது
எனவே, பச்சை குத்திய காலத்தில் இருந்து, ஒரு வருட காலத்திற்கு குறித்த நபர்களிடம் இருந்து குருதி பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என சிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
