நீண்டதூர கயிற்று பாலத்தில் நடந்து புதிய சாதனை : வைரலாகும் காணொளி
இத்தாலியில் உள்ள மெசினா நீரிணை கடலில் இருந்து சிசிலி வரை சுமார் 3.6 கிலோமீட்டர் தூரத்திற்கு, ஸ்லாக்லைன் எனும் கயிற்றுப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கயிற்றுப் பாலத்தில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜோன் ரூஸ், நீண்ட தூரம் நடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
புதிய சாதனைக்கு சொந்தக்காரர்
மெசினா நீரிணையை கயிற்றில் நடந்து கடந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.இவர் கயிற்றில் நடக்கும்போது காணொளி பதிவிலும் பேசி இருக்கிறார்.
அவர் கயிற்றில் பிடிகள் எதுவும் இல்லாமல் முந்தைய சாதனையான 2.7 கிலோமீட்டர் தூரத்தை கடந்து முறியடித்தார்.
வைரலாகும் காணொளி
இருந்தபோதிலும் கயிற்றுப்பாலத்தின் 3 ஆயிரத்து 566 மீட்டரை கடந்த அவர், எஞ்சிய 80 மீட்டரை கடப்பதற்குள் சமநிலையை தவறவிட்டு, கீழிறங்கியதால் முழுமையான புதிய சாதனையை படைக்க தவறவிட்டார்.
அவர் கடலுக்கு மேலே நடந்தபோது 100 மீட்டர் உயரத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2.57 மணி நேரத்தில் இந்த தூரத்தை அவர் கடந்தார். அது பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |