இந்திய அணி படைத்த புதிய சாதனை
Indian Cricket Team
New Zealand Cricket Team
Pakistan national cricket team
By Sumithiran
சர்வதேச ரி 20 போட்டிகளில் அதிகபோட்டிகளில் வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று (01) நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி இந்த சாதனையை படைத்துள்ளது.
136 போட்டிகளில் வெற்றி
இதன்படி 2006 முதல் தற்போது வரை 213 ரி 20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 136 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியின் சாதனை முறியடிப்பு
இந்த வெற்றியின் மூலம் 226 ஆட்டங்களில் 135 வெற்றிகளைப் பெற்றுள்ள பாகிஸ்தானை தாண்டி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
ரி 20 போட்டிகளில் நியூசிலாந்து அணி 200 போட்டிகளில் விளையாடி 102 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா 181 போட்டிகளில் விளையாடி 95 வெற்றிகளும் மற்றும் தென்னாபிரிக்கா 171 போட்டிகளில் விளையாடி 95 வெற்றிகளும் பெற்று அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்