பேராதனை பல்கலைக்கழக மாணவனை காணவில்லை
Missing Persons
University of Peradeniya
Sri Lanka Police Investigation
By Sumithiran
பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை சேரகம வேரன்கட்டிகொட பகுதியைச் சேர்ந்த இந்த மாணவன் பல்கலைக்கழக அக்பர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் அவர் அங்கு இல்லை என விடுதியின் உபவேந்தர் நேற்று (21) பேராதனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில்
காணாமல் போன மாணவனின் கையடக்கத் தொலைபேசிக்கு பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்த போது அவர் குருநாகல் பிரதேசத்தில் இருந்ததாக காவல்துறை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பேராதனை காவல் நிலைய பிரதான பரிசோதகர் விஜித விஜேகோன் தலைமையில் பேராதனை காவல்துறையினர் மற்றும் பேராதனை பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி