புதிய அமைதி திட்டம்: உக்ரைனின் ரகசிய நகர்வு குறித்த பகீர் தகவல்
புதிதாக ஓா் அமைதி திட்டத்தை உக்ரைன் உருவாக்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்த 28 அம்ச திட்டம் தற்போது 20 அம்ச திட்டமாக சுருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை உக்ரைன் ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு உத்தரவாதம்
அந்த அமைதி திட்டத்தில் பிராந்தியங்களை விட்டுக்கொடுப்ப்பது மற்றும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தலைவா்களின் அளவிலேயே பேசி முடிவு செய்யப்படும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதனடிப்படையில், புதிய அமைதி திட்டத்தை உருவாக்கி வருகின்றோம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முந்தைய திட்டத்தில் இடம் பெற்றுள்ள ரஷ்யாவுக்கு ஆதரவான அம்சங்கள் இடம் பெற்றிருக்காது எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |