காடு போன்ற முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு சீரம் போதும்: வீட்டிலேயே தயாரிக்கலாம்...!
Hair Growth
Beauty
Life Style
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூ (Hibiscus Flowers)
- வெந்தயம் (Fenugreek Seeds)
- கறிவேப்பிலை (Curry Leaves)
- இஞ்சி (Ginger)
- ஆளிவிதை (Flax Seeds)

பயன்படுத்தும் முறை
- அடிகனமான பாத்திரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- வெந்நீரை மட்டும் பயன்படுத்துவது அவசியம்.
- செம்பருத்தி மற்றும் வெந்தயம் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்த பின் அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
- நன்கு கொதித்து குமிழ்கள் வந்தவுடன் கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்க்கவும்.
- மொத்தம் 30 நிமிடம் கொதிக்க வைத்து15 நிமிடம் மூடி வைத்து ஆற விடவும்.
- பின்பு வடிகட்டி அந்த நீரில் ஆளிவிதைகளைச் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும்.
- ஆளிவிதை ஜெல் பதத்திற்கு மாறியதும் (சூடாக இருக்கும்போதே) வடிகட்டி குளிர்விக்கவும்.
- ஆளிவிதை ஜெல் சீக்கிரம் கெட்டியாகிவிடும் என்பதால் அதை மற்ற பொருட்களுடன் முதலில் சேர்க்கவில்லை.
- சீரம் முழுவதுமாக குளிர்ந்ததும் மற்றும் பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
- இதை தினமும் அப்ளை செய்யலாம்.
- தலைக்கு குளிக்கும் நாட்களில் இதை ஸ்டைலிங் ஜெல் போல பயன்படுத்தினால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |