தமிழகத்தில் தலைமறைவாக வாழ்ந்த இலங்கையர்! யாழ் விமான நிலையத்தில் வைத்து கைது
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தமிழகத்தில் தலைமறைவாகியிருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை நேற்றைய தினம்(21) கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணை
சந்தேக நபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் திரும்புவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த சந்தேக நபர், நீண்ட காலமாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை காவலில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
