எல்ல மலையிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
                                    
                    Sri Lanka
                
                                                
                    Death
                
                        
        
            
                
                By Shalini Balachandran
            
            
                
                
            
        
    இராவண எல்ல பிரதேசத்தில் எல்ல மலையில் இருந்து தவறி விழுந்தத்தில் 32 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபரும் அவரது நண்பரும் நேற்று(22) காலை எல்ல மலையில் ஏறி உள்ளனர்.
இந்நிலையில், மலையில் இருந்து இறங்கும் போது பள்ளத்தில் இருந்து விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி
இதனையடுத்து குறித்த நபர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு(22) உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        