மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான இளைஞன்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Dhilak
கிரியுல்ல, பஹல கட்டுக்கம்பல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் பயணித்த டிராக்டர் வண்டியின் பின்புறத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் கிரியுல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்