அஹுங்கல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை : காவல்துறையினர் வெளியிட்ட சந்தேகம்

Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Mar 02, 2024 05:24 AM GMT
Report

அஹுங்கல்ல பகுதியில் வைத்து பாதாள உலகக் குழு உறுப்பினரான கொஸ்கொட சுஜீயின் உறவினர் ஒருவர் நேற்று (01) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

லொகு பெடீ என்ற குற்றவாளியின் தரப்பினால் பெலியத்தயில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் சந்தேகிக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஹுங்கல்ல பிரதேசத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: ஒருவர் பலி! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: ஒருவர் பலி! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு 

ரிவால்வர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், இதன்போது கட்டுமானத்தில் இருக்கும் கடைக்கு அருகில் இருந்த நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கிதாரிகள் ஸ்கூட்டரில் தாக்குதல் மேற்கொள்ள வரும் காட்சி அருகில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

அஹுங்கல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை : காவல்துறையினர் வெளியிட்ட சந்தேகம் | A Person Shot Dead In Ahungalla Police Suspicion

பின்னர் குறித்த கடைக்கு அருகில் வந்த துப்பாக்கிதாரிகளுக்கு கடைக்குள் இருந்து ஒருவர் வந்து ஏதோ சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓட, துப்பாக்கிதாரி கடைக்குள் சென்று துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் செல்கின்றார். இந்த துப்பாக்கிச் சூடு அங்கிருந்த சிசிரிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் தலைப்பகுதியில் சுடப்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதிருப்தியடைந்த இந்தியா: இறுதியில் தாய்லாந்து எடுத்த தீர்மானம்

அதிருப்தியடைந்த இந்தியா: இறுதியில் தாய்லாந்து எடுத்த தீர்மானம்

பெலியத்தயில் ஐவர் சுட்டுக்கொலை

இந்த துப்பாக்கிச் சூட்டில் கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான மஞ்சு என்ற குசும் குமார மென்டிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அஹுங்கல்ல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை : காவல்துறையினர் வெளியிட்ட சந்தேகம் | A Person Shot Dead In Ahungalla Police Suspicion

பெலியத்தயில் ஐந்து பேர் கொல்லப்பட்டதில் உயிரிழந்த றோயல் பீச் சமனின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் பொடி பெடீ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கொலை செய்யப்பட்டவர் மீது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் உட்பட பல தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பு : மகிந்த அமரவீர சுட்டிக்காட்டு

விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பு : மகிந்த அமரவீர சுட்டிக்காட்டு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021