சுவிஸில் இருந்து யாழ் வந்தவர் திடீர் மரணம்!
Jaffna
Jaffna Teaching Hospital
Switzerland
By Laksi
சுவிட்சர்லாந்தில் இருந்து நேற்றையதினம் யாழ்ப்பாணம் வந்த நபரொருவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவமானது இன்றையதினம் (9) மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பாலசிங்கம் உதயகுமார் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றையதினம் சுவிஸில் இருந்து நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள தாயாரின் வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் இன்று (9) காலை குளியலறையில் குளிக்கச் சென்றவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்