கடற்தொழில் அமைச்சரின் கபட தனம்: டக்ளஸுக்கு எதிராக யாழில் ஒலித்த குரல்
கடற்தொழில் அமைச்சர் கபட தனமாக எமது பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ எத்தனித்து வருகிறதாகவும் அதற்கு நாம் இடமளிக்க முடியாது என்றும் அனைத்து மக்கள் ஒன்றிய உறுப்பினர் வி.சிறிபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்(09)செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், “வெள்ளாவெளி மக்கள் நீண்ட காலமாக சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், அத்தனையும் மீறி கடற்தொழில் அமைச்சர் டோக்கியோ சீமெந்து நிறுவனத்திற்கு சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ள்ளார்.
அமைச்சர் தரப்பு
எமது பிரதேசம் தாழ்நில பிரதேசம். கடலுக்கும் எமது நிலத்திற்கும் மூன்றடி இடைவெளியே உண்டு, அங்கு சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்டால் கடல் நீர் உட்புகுந்து எமது கிராமமே கடலில் மூழ்கிவிடும்.
எமது போராட்டக்காரர்கள் மது போதையில் நின்றார்கள் என்றும், 150க்கும் குறைவானவர்களே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என அமைச்சர் தரப்பு கூறுவது முற்றிலும் பொய்.
யார் மது போதையில் அங்கு வந்தார்கள் என அங்கிருந்தவர்களுக்கு தெரியும். அவர்களின் விபரங்களையும் வெளியிட தயாராக இருக்கிறோம். பொன்னாவெளியில் மக்கள் இல்லை என கூறுகின்றார்கள். அந்த மக்களை அங்கிருந்து துரத்தியடித்ததே இவர்கள் தான்.
டோக்கியோ சீமெந்து தொழிற்சாலைக்கு நிலங்களை வழங்கிய போது , அவர்கள் அங்கு ஆழ் துளை கிணறுகளை அடித்த போதே அப்பகுதியில் நிலத்தடி நீர் உவரானது. அதனாலேயே மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |