பிரித்தானிய எல்லைகளில் புதிய விதிகள்: இன்று முதல் கட்டாயமாகும் நடைமுறை
பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைவருக்குமுரிய புதிய பயண நடைமுறை முறை இன்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
குறிப்பாக மின்னணு பயண அங்கீகாரம் நடைமுறையும் இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்கள் கட்டாயமாக நாட்டுக்குள் நுழையும் போது பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது உரிமைச் சான்றிழை கண்டிப்பாக சமர்ப்பிக்கப்படவேண்டிய நிலையும் இன்று முதல் உருவாகியுள்ளது.
நுழைவிசைவு எனப்படும் விசா இல்லாமல் பிரித்தானியாவுக்குள் பயணிக்கும் உரித்தை கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 85 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த புதிய விதிகள் இன்றுமுதல் பொருந்தும்.
மின்னணு பயண அங்கீகாரம்
இன்று முதல் செல்லுபடியாகும் வகையில் ETA எனப்படும் மின்னணு பயண அங்கீகாரம் இவர்களுக்கு கண்டிப்பாக தேவை.

இது இல்லாவிட்டால் பயணத்துக்கு அனுமதிக்கப்படமாடடடார்கள். இதேபோல முன்னர் எல்லாம் இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்கள் தமது இரண்டாம் குடியுரிமை நாட்டின் கடவுச்சீடடை சமர்ப்பித்து பிரித்தானியாவுக்குள் நுழைய முடியும் என்றாலும் இன்று முதல் அவ்வாறு செய்ய முடியதாது.
இதன் அடிப்படையில் அயர்லாந்தை இரட்டை குடியுரிமை கொண்டவர்களை தவிர ஏனைய அனைத்து இரட்டை குடியுரிமையாளர்களும் பிரிதானியர்கள் உட்பட அனைவரும் பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது பெரும் பணச்செலவுடன் எடுப்பபட்ட உரிமைச் சான்றிதழை காட்டாமல் நாட்டுக்குள் நுழைய முடியாது.
இந்த நிலையில் தற்போது ETA எனப்படும் மின்னணு பயண அங்கீகாரம் பெறுவதற்கு 16 பவுண்ஸ் அறவிடப்படாலும் விரைவில் இந்த கட்டணம் உயர்த்தப்படும் எனவும் பிரித்தானிய அரசாங்கம் கூறியுள்ளது.
ETA ஐ பெறுவதற்கு கடவுச்சீட்டு விபரங்களும் பொருத்தமான நிழற்படமும் சமர்ப்பிக்கபட வேண்டும். அத்துடன் சில கேள்விகளுக்கும் விண்ணப்பதாரி பதிலளிக்க வேண்டும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |