அரசின் இரகசிய சூழ்ச்சி அம்பலம்
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை இரண்டு நிறுவனங்களாகப் பிரிப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பொதுச் செயலாளர் உதயங்க ரத்ன திவாகர இன்று (01) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் சபை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் அதன் பணிப்பாளர் சபை உள்ளிட்ட 56 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இரண்டு நிறுவனங்களாக பிரிக்க
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தை இரண்டு நிறுவனங்களாக பிரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
காப்பீட்டுக் கழகத் தலைவரும் ஏப்ரல் 25ஆம் திகதி வெளியிட்ட கடிதத்தில் இதையே குறிப்பிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த தீர்மானத்திற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறாமல் அவ்வாறான தீர்மானத்தை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு சட்டரீதியாக உரிமை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலாபம் ஈட்டும் நிறுவனமாக
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக விளங்குவதாகவும், அது மக்களுக்கு பெரும் நலனைக் கொண்டுவரும் எனவும் அவர் கூறுகிறார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம்
இதன்படி, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை இரண்டு நிறுவனங்களாகப் பிரிப்பதற்கு அமைச்சர்கள் சபை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
மேலும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை புதிதாக நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களின் சொத்துக்களை பிரிப்பதை தடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக மாற்றுமாறும் நீதிமன்றில் மனுதாரர் கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |