யாழில் ஏழை குடும்பமொன்றை அச்சுறுத்தி பணத்தை இலஞ்சமாகப் பெற்ற காவல்துறையினர் !

Sri Lanka Police Jaffna Crime
By Laksi Jun 04, 2024 06:39 PM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna)- பொன்னாலையில் குழாய்க்கிணறு வெட்டிய பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்று அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தைக் காட்டி காவல்துறையினர் 8 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (3) மதியம் பொன்னாலை மேற்கில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மேற்படி பெண் தலைமைத்துவக் குடும்பம் குடிசை வீடொன்றிலேயே வசித்து வருகின்றது.நீண்ட காலமாக கிணறு இல்லாமல் பொதுக் கிணறுகள் மற்றும் அயல் வீட்டுக் கிணறுகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

மோடியின் வெற்றி: யாழில் கொண்டாடிய இலங்கை சிவசேனை அமைப்பு

மோடியின் வெற்றி: யாழில் கொண்டாடிய இலங்கை சிவசேனை அமைப்பு

அச்சுறுத்திய காவல்துறையினர்

இந்த குடும்பத்தில் தற்போது க.பொ.த உயர்தரத்தில் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன் கற்றல் நேரத்திற்கு மேலதிகமாக பகுதி நேரமாக தொழிலுக்குச் சென்று சேகரித்த பணத்தில் குழாய்க் கிணறு ஒன்றை அமைக்க முடிவெடுத்தனர்.

யாழில் ஏழை குடும்பமொன்றை அச்சுறுத்தி பணத்தை இலஞ்சமாகப் பெற்ற காவல்துறையினர் ! | A Policeman Robbed A Woman Of Money In Jaffna

நேற்று திங்கட்கிழமை மதியம் குழாய்க் கிணறு வெட்டிக் கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த காவல்துறையினர் அனுமதி பெறாமல் குழாய்க்கிணறு வெட்டுவதாக தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது எனக்கூறி அக்குடும்பத்தை அச்சுறுத்தினர்.

கிணறு வெட்டுவதற்காக வந்தவர்களின் கருவிகளைக் கொண்டுசெல்லப்போவதாக மிரட்டினர். செய்வதறியாது திகைத்து நின்ற மேற்படிக் குடும்பம் அனுமதி பெறவேண்டும் என்ற விடயம் தமக்கு தெரியாது எனவும் தமது கஸ்ட நிலையையும் காவல்துறையினருக்கு எடுத்துக் கூறினர்.

அவர்களின் கருத்தைச் செவிமடுக்காத காவல்துறையினர் 15 ஆயிரம் ரூபா பணம் தந்தால் எதுவும் செய்யாமல் விட்டுச் செல்வதாகக் கூறினர். ஆனால் அக்குடும்பமோ கிணறு வெட்டுவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை மாத்திரமே சேகரித்து வைத்திருந்தது.

வெள்ள நிலைமை குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

வெள்ள நிலைமை குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

இலஞ்சம்

தம்மிடம் பணம் இல்லை எனவும் அவ்வாறாயின் இரண்டாயிரம் ரூபா தருகின்றோம் எனவும் கெஞ்சிக் கேட்டனர். காவல்துறையினர் உடன்படவில்லை. ஐயாயிரம் ரூபா தருகின்றோம் என்றனர். அதற்கும் உடன்படாது 8 ஆயிரம் ரூபா பணத்தைப் பறித்துக்கொண்டு சென்றனர்.

யாழில் ஏழை குடும்பமொன்றை அச்சுறுத்தி பணத்தை இலஞ்சமாகப் பெற்ற காவல்துறையினர் ! | A Policeman Robbed A Woman Of Money In Jaffna

க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் பகுதி நேர கூலி வேலைக்கு சென்று சிறுக சிறுக சேமித்த பணத்திலேயே அந்த குழாய் கிணறு தோண்டப்பட்டது. அத்துடன் குறித்த மாணவன் உழைத்த பணத்தையே காவல்துறையினர் இலஞ்சமாக பெற்றுச் சென்றுள்ளனர்.

பொன்னாலையில் பல குழாய்க்கிணறுகள் வெட்டப்பட்டிருக்கின்ற போதிலும் இதுவரை யாரும் அனுமதி பெற்றிருக்கவில்லை. அனுமதி பெறவேண்டும் என்ற விடயம் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மேற்படி குடும்பத்திற்கு தெரிந்திருக்கவில்லை.

தனியார் வீடொன்றுக்குள் பாய்ந்த காவல்துறையினரின் வாகனம்: மயிரிழையில் தப்பிய மாணவர்கள்

தனியார் வீடொன்றுக்குள் பாய்ந்த காவல்துறையினரின் வாகனம்: மயிரிழையில் தப்பிய மாணவர்கள்

காவல்துறையினரின் அராஜகங்கள்  

சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையினர் பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதைப் போன்று பணத்தைப் பறித்துச் சென்றிருக்கின்றனர்.

யாழில் ஏழை குடும்பமொன்றை அச்சுறுத்தி பணத்தை இலஞ்சமாகப் பெற்ற காவல்துறையினர் ! | A Policeman Robbed A Woman Of Money In Jaffna

சுமணசிறி, குமார, கசுன் என்ற மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களுமே இவ்வாறு இலஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை காவல்துறையினரின் சித்திரவதையில் அலெக்ஸ் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை காவல்  நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி இடமாற்றம் பெற்று வந்த பின்னரே இவ்வாறான காவல்துறையினரின்  அராஜகங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.

கட்டுநாயக்கவில் மாயமான இளம் தாயும் மகளும்: மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்

கட்டுநாயக்கவில் மாயமான இளம் தாயும் மகளும்: மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி