கட்டுநாயக்கவில் மாயமான இளம் தாயும் மகளும்: மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்
Sri Lanka Police
Bandaranaike International Airport
Sri Lanka Police Investigation
By Aadhithya
கட்டுநாயக்கவில் (Katunayake) இளம் தாயும் பிள்ளையும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் கட்டுநாயக்க காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில், யசோதா ஹன்சனி என்ற 26 வயதுடைய பெண்ணும் அவரது 04 வயது மகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
காணாமல் போன பெண்
இந்நிலையில், காணாமல் போன பெண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்கள் உதவியைநாடியுள்ளர்.
அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறையினர், பெண் மற்றும் அவரது மகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும் என அறிவித்துள்ளனர்.
மேலும், இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் 071-859 1639 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்