தெற்குப் பசிபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
United States of America
Earthquake
By Sathangani
தெற்கு பசிபிக் பகுதியில் இன்று (22) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவான நிலநடுக்கத்தின் தாக்கம் வனுவாட்டு பகுதியில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது பெரிய நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த ஜனவரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இந்த வருடத்தின் இரண்டாவது பெரிய நிலநடுக்கமாக இது கொள்ளப்படுகின்றது.
இப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி