விரைவில் கைதாகப்போகும் மிகவும் சக்திவாய்ந்த நபர்
சண்டே லீடர் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் பத்திரிகையாளர் கீத் நொயர் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, பொறுப்பானவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.
காலத்தின் மணலில் புதைக்கப்பட்ட சம்பவங்கள்
காலத்தின் மணலில் புதைக்கப்பட்ட அந்த சம்பவங்கள் குறித்து மீண்டும் விசாரணையைத் தொடங்கியது தற்போதைய அரசாங்கம்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனது குறித்து தற்போது மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றம் விசாரித்து வருவதாகவும், சாட்சிகளை பாதித்த ஒரு மூத்த இராணுவ அதிகாரி காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் சக்திவாய்ந்த நபர் எதிர்காலத்தில் கைது
அதன்படி, அந்த சம்பவங்களில் தொடர்புடைய முன்னாள் சக்திவாய்ந்த நபர் ஒருவர் எதிர்காலத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 8 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்