ஒன்றரை வருடங்களாக காணாமற்போன மீனவர்கள் : கண்ணீர் மல்க கதறும் உறவுகள்
திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட "சஸ்மி துவா 2" என்ற பலநாள் கப்பல் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி புயலில் சிக்கி விபத்துக்குள்ளானது
இவ்வாறு விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த மீனவர்கள் ஐவர் காணாமற்போன நிலையில் அவர்களை மீட்டுத் தருமாறு உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்கள்
குறித்த கப்பலில் இ. பி. பிரேமசாந்த, டபிள்யூ. ஆர். டி ரசங்க, சந்தன பிரித்திகுமார, ஆர். பி. விக்கிரமபண்டார, ஏ. டபிள்யூ வீரசேகர இருந்த 5 மீனவர்களே காணாமற் போனவர்களாவர்.

மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் குறித்த மீனவர்கள் 5 பேர் தொடர்பில் இதுவரையில் ஒன்றரை வருடங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
விபத்திற்குப் பிறகு, கடந்த ஜூன் 6-ம் திகதி முதல் மீனவர்களின் உறவினர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அவ்வப்போது தொலைபேசி அழைப்புகள் வருவதால், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்றொழில் அமைச்சு கடற்படை
தொலைபேசி அழைப்பாளர்கள் தற்போது காணாமல் போன மீனவர்களாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சுக்கும் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
