ஜனாதிபதி தேர்தலில் ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை கொண்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரவுள்ளதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார(shantha bandara) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபாநாயகரின் அனுமதியுடன் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சாந்த பண்டார,
ஜனாதிபதி தேர்தல்
மற்ற தேர்தல்களுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் வரவுள்ளது. நம் நாட்டில் ஊடகங்களில் இருப்பவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
இந்த நாட்டில் பதினேழு பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. ஐம்பத்திரண்டு வானொலி அலைவரிசைகள் உள்ளன.
தபால் மூலம் வாக்களிப்பு
தேர்தல் நாட்களில் பலர் இந்த செயலில் ஈடுபடுகின்றனர். நிறைய பேர் நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள்.
ஊடகவியலாளர்கள் என்னிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். இதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |